பிப். 16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: ஜோதிமணி அறிவிப்பு

தூத்துக்குடி–நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் வரும் திங்கள்கிழமை, பிப்ரவரி 16, 2026 அன்று நடைபெறும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி அறிவித்துள்ளார். அன்று காலை நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் நடைபெறும் பெருமன்றக் கூட்டத்தில் உபதலைவர், குருத்துவச் செயலர், லே செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. மொத்தம் 454 பேர் வாக்களிக்க உள்ளனர். வேட்புமனுக்கள் பிப்ரவரி 14 முதல் 15 மாலை 6 மணி வரை பெறப்பட்டு செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி