தூத்துக்குடியில் கார்த்திகை மாத சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு, பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் 15க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால், ஆலயம் முழுவதும் புதுமண தம்பதிகள் மற்றும் உறவினர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும், இந்த சுப தினத்தை ஒட்டி பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ₹3000 வரையிலும், பிச்சிப்பூ கிலோ ₹2000 வரையிலும் விற்பனையானது.