தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்பட உள்ள நிலையில் தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ 1500 ரூபாய் வரையும் பிச்சிப்பூ கிலோ 1200 ரூபாய் வரையும் ரோஜாப்பூ வகைகள் 20 ரூபாய் வரை விற்பனையானது. தீபாவளி பண்டிகைக்காக ஊட்டி, கொடைக்கானல், ஓசூர், பெங்களூர் ஆகிய பகுதியிலிருந்து 10 வண்ணங்களில் ரோஜா பூக்கள் வரவழைக்கப்பட்டு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் செண்டு பூ கிலோ 80 ரூபாய் வரையும், பச்சை கிலோ 50 ரூபாய் வரையும் விற்பனையானது. பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.