தூத்துக்குடி: விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். 

அவருக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே என் நேரு, கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா ஆராதகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர்கள் இளம் பகவதி, கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், திமுக மருத்துவ அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் நெல்லை புறப்பட்டு சென்றார்.

தொடர்புடைய செய்தி