ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தினை பார்வையிட்ட மாணவர்கள்..

ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தினை சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி மாணவர்கள் வருகை தந்தனர். இவர்கள் பி சைட், சி சைட் போன்ற இடங்களைப் பார்வையிட்டனர். அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தினை கண்டு களிக்க சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி மாணவர்கள் வருகை தந்தனர். இவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், வாஞ்சி நாதன் அவர்களின் பேரனும் எனது நண்பருமான வாங்கி கோபாலகிருஷ்ணன் என்னை கேட்டிருந்தார். நானும் அவர்களை காணுவதற்காக ஆதிச்சநல்லூர் சென்றிருந்தேன். அங்கே என்னை பார்த்தவுடன் மாணவர்கள் அனைவரும் என்னைப் பற்றி பல கேள்விகளை கேட்டனர். ஆச்சரியமாக இருந்தது. முதல் நாளே என்னைப் பற்றி இன்டர்நெட்டில் தேடி படித்து அறிந்திருந்திருக்கிறார்கள். எனவே நான் எழுதிய நூல் எனது பேட்டி என, என்னைப் பற்றி நிறைய கேள்விகளை கேட்டார்கள். மிக சந்தோஷமாக இருந்தது. எனவே அவர்களுக்கு ஆதிச்சநல்லூர் பற்றி பேச எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கூடுதலாக தாமிரபரணியை காப்பாற்ற வேண்டிய மாணவர்கள் கடமை என்பதை அவர்களிடம் உணர்த்துவதற்கும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.

தொடர்புடைய செய்தி