தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோவிலில் மாசி மாதப் பிறப்பை ஒட்டி விஷ்ணுபதி புண்ணிய காலத்தில், வைகுண்டபதி பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இன்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர். விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை 27 முறை சுற்றி வந்து வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஏராளமான பக்தர்கள் கோவிலை 27 முறை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.