இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். எந்தவொரு திட்டமானாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் 2025-26-ம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் இன்றைய தினம் மேலஆத்தூர் ஊராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இன்று முதல் 26.03.2026 வரை ஒரு ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 144 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
பேரணிக்குள் புகுந்த கார் மோதி ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்