அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆத்தூர் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர்கள் குமரேசன், ராஜபாண்டியன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு நாராயணன் மற்றும் மாரியப்பன் (எ) பெரியமுண்டன் ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தும், அரிவாளால் காயம்பட்ட சுயம்புலிங்கத்தை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தும் துரிதமாக செயல்பட்டனர்.
மேற்படி ஆத்தூர் பகுதியில் கொலை சம்பவம் ஏற்படாமல் தடுத்தும், காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் துரிதமாக செயல்பட்ட மேற்படி சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் ஆகிய 3 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (டிசம்பர் 28) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.