வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், விண்ணப்பப் படிவத்தை அரசியல் கட்சி முகவர்களிடம் கொடுக்கவோ, பெறவோ கூடாது என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத்திடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. சண்முகநாதன், கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆகியோர் மனு அளித்தனர். இப்பணியில் பிஎல்ஓ-க்கள் அரசியல் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிஎல்ஏ-க்களிடம் ஒரு நாளைக்கு 50 விண்ணப்ப படிவத்தை வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்து பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது. இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், எஸ். ஐ. ஆர். -இன் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.