வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு: பார்வையாளர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான வ. உ. சி. அரசு பொறியியல் கல்லூரியில், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று ஆய்வு நடத்தினர். வாக்குப்பதிவுக்குப் பிறகு இயந்திரங்களை பாதுகாப்பாக சேமித்தல், வாக்கு எண்ணும் மையங்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் பரிசோதித்தனர். மேலும், மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி