தூத்துக்குடி: ஆசிரியர்கள் கண்களை மூடி ஆர்ப்பாட்டம் (VIDEO)

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் சுமார் 20,000 க்கும் மேல் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்த இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. 

இதைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இடைநிலைத் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்களில் சிவப்புத் துணி கட்டி, கோரிக்கைப் பதாகைகளை ஏந்தியபடி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு தங்களது 14 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி சமூக நீதியை காக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி