சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றம் மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. 2020 ஆம் ஆண்டு வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் விசாரணைக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், இறுதி வாதங்கள் முடிவடைந்துள்ளன.