கயத்தாறு அருகே பாதை மூடல்: கிராம மக்கள் தர்ணா

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கோடாங்கால் பகுதியில் நூற்றாண்டு பழமையான பொதுப்பாதையை ரயில்வே திடீரென இரும்பு வேலி அமைத்து மூடியதால், கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய நிலங்களுக்கு செல்ல முக்கிய வழியாக இருந்த இந்த பாதை, மாற்று சுரங்கப்பாதை நீர் தேங்கியதால் பயன்படாததாக உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமம் எதிர்கொள்வதாக கூறி, பாதை திறக்கப்படாவிட்டால் ஜூன் 15 அன்று பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி