நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வட்டார மருத்துவ அலுவலர் டி. ஏ. ஜே. ஜோசுவா பிரவுண் பேசுகையில், "காசநோயாளிகளுக்கு மருந்து மாத்திரை மட்டும் போதாது, அவர்களுக்கு சிகிச்சை காலத்தில் தேவையான சத்தான உணவுப் பொருட்கள் உட்கொள்ள வேண்டும். ஆகவே இதனை கருத்தில் கொண்டு AAA இன்ஜினியரிங் கன்சல்டன்சிஸ் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சார்பில் ரமலான் நோன்பை முன்னிட்டு தொடர்ந்து ஆறாவது வருடமாக காசநோயாளிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருவது மனிதநேயமிக்க செயலாகும்.
இந்த ஆண்டு ரூ. 20,000 மதிப்புள்ள உணவுப் பொருட்களை நோயாளிகளுக்கு வழங்கி உள்ளார்கள்" என்று கூறினார். உதவி மருத்துவ அலுவலர் முத்தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ. அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்று பேசினார். ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட உதவிகளை AAA இன்ஜினியரிங் கன்சல்டன்சிஸ் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்