சாத்தான்குளம்: குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கிய மழை நீர்

சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று (நவம்பர் 14) காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தட்டார்மடம், முதலூர், இடைச்சிவிளை, தாமரை மொழி, கலியன்விலை போன்ற பகுதிகளில் பெய்த தொடர் மழையால், கலியன்விலை குடியிருப்புப் பகுதி முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும், அன்றாட தேவைகளை நிறைவேற்ற முடியாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி