தூத்துக்குடி: காற்றாலை நிறுவனத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் மேல பூவானி கிராமத்தில், தனியார் கிரீன் லீப் காற்றாலை நிறுவனம் ஓடை பாதையை ஆக்கிரமித்ததால், 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நெல், உழுந்து, சோளம் போன்ற பயிர்களை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஓடையில் இறங்கி குடியேறி சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காற்றாலை நிறுவனம் பணியை நிறுத்தவும், ஓடை வழியை மீட்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி