தூத்துக்குடி நீதிமன்றம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 14 வயது சிறுமி மீதான போக்சோ வழக்கில் குற்றவாளி மகாராஜனுக்கு இயற்கை மரணம் வரை ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 12,500 அபராதமும் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளையும், அரசு தரப்பு வழக்கறிஞரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.