தூத்துக்குடி: பங்குனி உத்திர திருவிழா; பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம்

நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 11) பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் தங்களது குலதெய்வ வழிபாட்டிற்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வழிபாடு செய்வர்.

இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 11) தூத்துக்குடியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் காலை முதலே பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு சாஸ்தா கோயிலுக்கு செல்வதற்காக பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

திருநெல்வேலி நாசரேத் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில் பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதிகள் இயக்கப்படாததால் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் பேருந்து வரும்போது முண்டிகொண்டு பொதுமக்கள் பேருந்துகளில் ஏறும் நிலையும் உருவாகியுள்ளது எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி