தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாசரேத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, பேவர் பிளாக் நடைபாதை மற்றும் “ஐ லவ் நாசரேத்” செல்ஃபி பாயிண்டை திறந்து வைத்தார். திருச்செந்தூர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பேரூராட்சி பொது நிதியில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.