தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற மரம் வெட்டும் தொழிலாளி மாடசாமி (55) மீது அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு தப்பிச் சென்றது. கடுமையாக காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய வாகனத்தை தேடி வருகின்றனர்.