தூத்துக்குடி: மைல் கல் மீது பைக் மோதி விபத்து; ஒருவர் பலி

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் செந்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெபமணி மகன் பர்னபாஸ் ஜோஸ்வா (51) இவர் தனது நண்பரான ஜான் என்பவரின் மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். சாயர்புரம் நம்மாழ்வார் தெரு அருகே சென்று கொண்டிருந்தபோது பைக் நிலை குலைந்து மைல் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 இதில் பலத்த காயம் அடைந்த பர்னபாஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி