தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலையர்புரத்தில், மத்திய-மாநில அரசின் காப்பீடு மற்றும் ஈஸ்ராம் அட்டைகள் வழங்குவதாக கூறி வெளியூரைச் சேர்ந்த பெண்கள் 400க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ரூ. 100 முதல் ரூ. 500 வரை வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அட்டைகள் வழங்கப்படாததால் பொதுமக்கள் அந்த பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 3 பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.