சாத்தான்குளத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

சாத்தான்குளம் வட்டாட்சியராக இருந்த இசக்கி முருகேஸ்வரி, தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணிபுரிந்த பொன்னுலட்சுமி சாத்தான்குளம் வட்டாட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். சாத்தான்குளம் புதிய வட்டாட்சியருக்கு வருவாய் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி