தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறு பேசியதாக திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். மேலும், இத்தகைய பேச்சுகளை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.