தூத்துக்குடி: கவின் படுகொலைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தூத்துக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கையில், கவின் படுகொலை கண்டிக்கத்தக்கது. கவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவங்களைத் தடுக்க தமிழக அரசு தனியாகச் சட்டம் கொண்டுவர வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி