இதுபோல் கடந்த வாரம், மகன்களைப் பார்ப்பதற்காக நவஷீலா, வீட்டைப் பூட்டிவிட்டு சென்னை சென்று விட்டார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்மணி, நவஷீலா வீட்டில் மாலை நேரத்தில் மின்விளக்குப் போட்டு பின்னர் காலையில் விளக்கை அணைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நவஷீலாவின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்துள்ளது.
இதுகுறித்து உறவினர்கள் சென்னையில் உள்ள நவஷீலாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சொந்த ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் வைத்திருந்த அரைப் பவுன் நகை நாணயம், எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டர் ஆகியவற்றை மர்மநபர்கள் வீட்டுக் கதவை உடைத்து திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.