பேராசிரியர் ஆழ்வார், நெல்லை கவிநேசனின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்துக்கது. இந்த நூலை செய்துங்கநல்லூரில் வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் அறிமுகம் செய்தார். எழுத்தாளர் காமராசு செல்வன் உடன் இருந்தார்.
இந்நூலை பற்றி நெல்லை கவிநேசன் கூறும்போது, "ஒரு எழுத்தாளனுக்கு பெருமை தனது நூல் பல்வேறு மொழிகளில் வருவது ஆகும். என்னுடைய சட்டம் சந்தித்த பெண்கள் நூல் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலை எனது ஆசிரியர் பேராசிரியர் ஆழ்வார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூலை குமரன் பப்பளிகேசன் வெளியிட்டு உள்ளது. எனது நூலை எனது ஆசிரியரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருப்பது எனக்கு சந்தோசத்தினை தருகிறது" என்றார்.