இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு மானிய விலையில் நவீன தொழில்நுட்பத்தில் உள்ள ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்கு டிஜிட்டல் சிக்னல் விநியோகிஸ்தர் சாத்தான்குளம் டி.ஜே. கென்னடி தலைமை தாங்கினார். விழாவிற்கு வருகை தந்தவர்களை அரசு கேபிள் டிவி நிறுவன தொழில்நுட்ப உதவியாளர் ச. விக்னேஷ் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளர் (தனி வட்டாட்சியர்) எம். ராஜலட்சுமி, அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டரும், கென்ஸ் கேபிள் விஷன் உரிமையாளருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடியிடம் ஹெச்டி செட்டாப் பாக்ஸை வழங்கி தொடங்கி வைத்தார்.