தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தாமிரபரணி கரையோரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாதிக்கப்படக்கூடிய அனைத்து இடங்களிலிருந்தும் மக்களை வெளியேற்ற ஏரல் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியே வருமாறு காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார்.