தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர், காவல் ஆய்வாளர் திலீபன் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். சிங்கப்பெண் பாதுகாப்பு படைக்கு பணிமாறுதல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பணிமாறுதல் வழங்காமல் அதிக பணிச்சுமை கொடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து அவரது கணவர் கேட்டபோது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.