எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இந்தப் பகுதியில் சிப்காட் அமைப்பதை கைவிட்டு, விவசாய நிலங்கள் இல்லாத தரிசு நிலப் பகுதியில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான தனியார் காற்றாலை நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் விவசாய நீர்வழிப்பாதைகள் மற்றும் நீர்நிலைகளைச் சேதப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு காற்றாலை நிறுவனங்களிடமிருந்து சமூக பாதுகாப்பு நிதியைப் பெற்று, சேதமான நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.