தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சி அருகே காசிலிங்கபுரம் பகுதியில் நில அளவீட்டில் முறைகேடு நடந்ததாக விவசாயி பரமசிவன் குற்றம்சாட்டியுள்ளார். அண்டை நில உரிமையாளர் ராஜாமணியிடம் பணம் பெற்றுக்கொண்டு, நில அளவையர் மணிலால் தனது நிலத்திற்குள் கல் நட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, விவசாயி கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.