தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் 2வது தெருவான களஞ்சியம் தெரு சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த பகுதி பிரசித்தி பெற்ற யோவான் பேராலயத்துக்கு பின்புறம் உள்ளது. வழிபாட்டு தலம், தபால் நிலையம், மெட்ரிக்குலேஷன் பள்ளி, துவக்கப் பள்ளி மற்றும் அனைத்து தெருக்களுக்கும் செல்லும் பிரதான சாலையாக இந்தப் பகுதி உள்ளது. இந்த வழியாக மாணவர்கள், மாணவிகள், சிறு வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் இந்த வழியாகத் தான் செல்கின்றனர்.
பொதுமக்கள் நடந்து செல்லும் இந்த பகுதியில் உள்ள இந்த மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.