அதன்படி வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் இரட்டை அகல ரயில் பாதை திட்டம் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் கலா, கயத்தார் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி முன்னாள் தாசில்தார் வசந்தமல்லிகா, தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனிதாசில்தாராகவும், அரசு கேபிள் டிவி தனிதாசில்தார் ராஜலட்சுமி, சில்லாநத்தம் சிப்காட் நில எடுப்பு தனிதாசில்தாராகவும், நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு அலகு-1 தனிதாசில்தார் பொன்னுலட்சுமி,
சாத்தான்குளம் தாசில்தாராகவும், கயத்தார் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் அறிவழகன் என்ற சிவராஜ் ஓட்டப்பிடாரம் தாசில்தாராகவும், அல்லிகுளம் சிப்காட் நில எடுப்பு அலகு-7 தனிதாசில்தார் வாமணன், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நில எடுப்பு அலகு-4 தனிதாசில்தாராகவும், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் ராணி, தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்பு அலகு-3 தனிதாசில்தாராகவும்,
தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்பு அலகு-3 தனிதாசில்தார் செல்வலட்சுமி தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.