தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 22.11.2025 முதல் கனமழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று (23.11.2025) பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மருதூர் அணைக்கட்டிலிருந்து 15250 கன அடி நீரும், திருவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து 11060 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு தாமிரபரணி ஆற்றில் செல்கிறது. கோரம்பள்ளம் அணைக்கட்டிலிருந்து 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக ஏரல் மற்றும் ஆத்தூர் பாலங்களுக்கு அருகில் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி