தூத்துக்குடி - மும்பை இடையே நேரடி விமான சேவை: அதிகாரியிடம்மனு

மும்பையில் வசிக்கும் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற, தூத்துக்குடி–மும்பை இடையே நேரடி விமான சேவை தொடங்க வலியுறுத்தி, மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் நவி மும்பை சர்வதேச விமான நிலைய மேலாளரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய ஓடுதளம் மற்றும் நவீன முனையம் செயல்பாட்டில் உள்ளதால், பெரிய விமானங்கள் இயக்க இயலும் என்றும், நவி மும்பை விமான நிலையம் செயல்படும் போது தூத்துக்குடிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி