தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (14.06.2025), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், வருகின்ற ஜூலை முதல் வாரம் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவ முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மருத்துவ அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. தி. புவனேஷ் ராம், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு. யாழினி அவர்கள் (தூத்துக்குடி), மரு. வித்யா (கோவில்பட்டி), துணை இயக்குநர்கள், இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட பிரதிநிதி, இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கத்தின் மாவட்ட பிரதிநிதி, தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்க கூட்டமைப்பின் பிரதிநிதி, வட்டார மருத்துவ அலுவலர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.