இவர் கடந்த 28.03.2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது வாரிசுதாரரான தாயார் லட்சுமிக்கு காப்பீடு ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை வங்கி ஊழியர்கள் தாயார் லட்சுமியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் வங்கியின் நிதிசார் கல்வி மைய ஆலோசகர் முருகேசன் கலந்து கொண்டு அரசு உயிர் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு பற்றி அந்த பகுதி மக்களுக்கு எடுத்துரைத்தார். இதில் தமிழ்நாடு கிராம வங்கி நாசரேத் கிளை மேலாளர் நிறைமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்வேதா, டிவிஎஸ் வட்டார உதவியாளர்கள் அருள் ராமேஸ்வரி, கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி