தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை (16.02.2026) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உடனடி தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.