தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (06.02.2026), புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு. க. இளம்பகவத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆ. இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. சேதுராமலிங்கம், தேர்தல் வட்டாட்சியர் திரு. தில்லைபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த புதிய அலுவலகம் தேர்தல் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.