மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், இன்று சாத்தான்குளம் வட்டம், எழுவரைமுக்கி ஊராட்சி, மேற்கு வழிவிள்ளை கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2025-26-ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகளை பார்வையிட்டார். 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.