சாத்தான்குளம் வட்டம், முதலூர் ஊராட்சியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சி மையத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைபெற்ற கால்நடை வளர்ப்போருக்கான பராமரிப்பு தொழில் நுட்ப பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் துவக்கி வைத்தார். பின்னர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.