சாத்தான்குளம் வார சந்தை பகுதியில் ஆசிரியர் கிளைட்டன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை, திருடன் யாரும் கவனிக்காத நேரத்தில் தள்ளிச் சென்று திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. திருடனைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.