தூத்துக்குடி: மாட்டுவண்டி போட்டி.. சீறி பாய்ந்த காளைகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை மலை பார்வதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. பெரிய, சிறிய மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 74 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மணக்கரையிலிருந்து வல்லநாடு வரை நடைபெற்ற இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி