தூத்துக்குடி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. சிறுவன் பலி

நாசரேத் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 17 வயது சிறுவன் கௌதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி