தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் 24 காவலர்கள் தங்கள் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்தனர். மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். இந்நிகழ்வில் காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், காவல் ஆய்வாளர் சுனைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.