தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் துறையின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஸ்ராம், தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மின்னல் கொடி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.