தூத்துக்குடி: விஜய் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தனி விமானம் மூலம் இன்று (பிப்.13) தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் காவி உடையில் வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "இது சனாதன யாத்திரை. கிடையாது நாலரை ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளேன். 10 வருடம் கழித்து வந்துள்ளேன். நாலரை ஆண்டுகளாக இந்த பயணம் தொடர்பாக திட்டமிட்டு இருந்து கொண்டிருந்தேன். முடியவில்லை. இப்போது வந்துள்ளேன். 

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியவுடன் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டுக்கு நம்ம நாட்டிற்கு நல்லது நடக்கட்டும். யார் வந்தாலும் நல்லது நடக்கட்டும். வரவேற்கிறேன்" என்று கூறினார். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பெண்கள் உள்ளிட்டோர் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சென்றார்.

தொடர்புடைய செய்தி