மெஞ்ஞானபுரம் அருகே நடுகாளான்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சிவனேஷ், வேலைக்கு செல்லாததால் தந்தை கண்டித்ததால் மனமுடைந்து, ஜே. ஜே. நகர் காட்டுப் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல்துறை உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.