தொழில் வழிச்சாலையின் நடுவில் சாமியாடு! நள்ளிரவு பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்தோப்பில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோவில் கொடை விழா, இந்த ஆண்டு தொழில் வழிச்சாலை அமைக்கப்பட்ட இடத்திலேயே நடைபெற்றது. திருவிழா நடைபெறும் பாரம்பரிய இடம் சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டாலும், அதே இடத்தில் தான் சாமி அருள் வரும் என்ற நம்பிக்கையால் பக்தர்கள் நள்ளிரவில் சாலையின் நடுவில் பூஜை செய்து சாமியாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதுடன், வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி